தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு விசேட சலுகை வவுச்சர்

தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு விசேட சலுகை வவுச்சர்-Voucher for Private Buses-Dilum Amunugama

பயணக்கட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தனியார் பஸ் வண்டி உரிமையாளர்களுக்கு விசேட சலுகை கொண்ட கழிவு வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கண்டியில் இன்று (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் சில தினங்களின் பின் நீக்கப்பட்டு விடும். அதற்கு முன்னர் இதனை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

சுமார் 17,000 பஸ் வண்டிகளின் சேவை மேற்படி போக்குவரத்துக் கட்டுப்பாடு காரணமாக பாதிப்படைந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

இதன் படி டயர் டியூப், உதிரிப்பாகங்கள், ஒயில் போன்றவற்றிற்கான கழிவுகளுடனான கொள்வனவு வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளதுடன் காப்புறுதி தொடர்பாகவும் சில சலுகை வவுச்சர்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

(அக்குறணை குறூப் நிருபர் - ஹபீஸ்)

Sun, 09/19/2021 - 20:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை