தடுப்பூசிகளை வழங்கியதும் பாடசாலைகள் மீள் திறப்பு

நம்பிக்கையுடன் இருப்பதாக டலஸ் அழகப்பெரும

15 முதல் 19 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதை அடுத்து உடனடியாக பாடசாலைகள் திறக்கப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.  நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அமைச்சர் அழகப்பெரும, பாடசாலைகள் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டு மாணவர்கள் வீடுகளில் தொடர்ந்தும் இருப்பது என்பது துரதிர்ஷ்டவசமான சம்பவம் என கூறினார். 15 முதல் 20 வயது வரையிலான சிறுவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி போடுவதற்கான முடிவை வரவேற்பதாக தெரிவித்த அவர், ஒக்டோபர் மாதத்தில் க.பொ.த சாதாரண மற்றும் உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என கூறினார்.

Mon, 09/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை