சுவிட்சர்லாந்துக்கு நேரடி விமான சேவை

நவம்பர் 04 முதல் மீண்டும் ஆரம்பம்

இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்குமிடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இந்த விமான சேவையை சுவிஸ் சர்வதேச விமான சேவை நிறுவனம் மீண்டும் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 04ஆம் திகதி முதல் இந்த சேவை மீண்டும் அமுலுக்கு வரவிருக்கிறது.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வாரத்தின் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்கு விமான சேவைகள் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sat, 09/18/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை