மோசடிகளில் ஈடுபட்டோரை பாதுகாக்க மாட்டோம்

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல்

இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுட்ட குற்றவாளிகளை ஒருபோதும் பாதுகாக்க மாட்டோமென விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரணவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் கோப் குழுவும் கடந்த காலங்களில் அவதானம் செலுத்தியிருந்தது. இதுத் தொடர்பில் கோப் குழுவிடமிருந்து கிடைக்கப்பெறும் புதிய அறிக்கைக்குப் பின்னர் நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

இலங்கைக் கிரிக்கெட் தொடர்பில் உலக அளவில் கவனம் செலுத்தப்படும் என்பதால், இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறும் விசாரணைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படாது. இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களை விளையாட்டுத்துறை அமைச்சர் என்றவகையில் நானோ, எங்களது அரசாங்கமோ பாதுகாக்கப்போவதில்லை. அவர்களுக்கு எதிராக சட்ட நடிவக்கை எடுக்கப்படும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Wed, 09/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை