மருத்துவ ஆலோசனைகளை பெறுவதற்கு புதிய வசதிகள்

ஆலோசனைகளுக்கு 247 அவசர தேவைகளுக்கு 1990

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரை அணுக 247 எனும் இலக்கத்தை தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனை பெற முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் பேராசிரியரான இந்திகா கருணாதிலக தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர்,

ஹொட்லைன் மூலம் மருத்துவரை தொடர்பு கொண்ட பின்னர், நோயாளரின் நிலைக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். சில நோயாளிகளுக்கு உடனடி மருத்துவ கவனிப்பு தேவைப்படும் நோயாளியின் நிலையை மருத்துவர் மதிப்பிடுவார், 1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவையின் ஹொட்லைனுடன் இது இணைக்கப்பட்டுள்ளது.

Thu, 09/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை