‘பூஸ்டர்’ தடுப்பூசித் திட்டத்திற்கு உலக சுகாதார அமைப்பு எதிர்ப்பு

பணக்கார நாடுகள் ‘பூஸ்டர்’ எனும் கூடுதல் கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தைத் ஆரம்பிப்பது குறித்து உலக சுகாதார அமைப்பு குறைகூறியுள்ளது.

அதனால், வளரும் நாடுகளிலும் வட்டாரங்களிலும் தடுப்பூசி கிடைப்பது இன்னும் சிரமமாகலாம் என அது குறிப்பிட்டது.

ஆபிரிக்கக் கண்டத்தில் தடுப்பூசி முயற்சிகள் மிகவும் பின்தங்கியுள்ளதை அமைப்பு சுட்டிக்காட்டியது. அங்கு இரண்டு வீதத்தினர் மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

இவ்வாண்டு இறுதிக்குள், ஆபிரிக்க மக்கள்தொகையில் குறைந்தது 30 வீதத்தினருக்கு தடுப்பூசி போட உலக சுகாதார அமைப்பு திட்டமிடுகிறது. அங்கு சுமார் 1.3 பில்லியன் பேர் வாழ்கின்றனர்.

இந்நிலையில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க மூன்றாவது முறை தடுப்பூசி வழங்கும் திட்டத்தை அமெரிக்கா அண்மையில் அறிவித்தது. இந்தத் திட்டம் இஸ்ரேலில் ஏற்கனவே அமுலில் இருப்பதோடு ஐரோப்பாவிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

எனினும் அமெரிக்காவில் தடுப்பூசி உற்பத்தித்திறன் அதிகரிக்கப்படுவதாக, அந்நாட்டின் முன்னணித் தொற்றுநோய் நிபுணர் ஆண்டனி பௌச்சி கூறியுள்ளார்.

குறைந்த, நடுத்தர வருமான நாடுகளுக்கு மில்லியன் கணக்கான தடுப்பூசிகளை வழங்க, அவ்வாறு செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.

Sun, 08/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை