பாகிஸ்தான் பெரும் தலைகளுக்கு பாரிய ஊழலுடன் தொடர்பிருப்பதாக சான்று

பாகிஸ்தான் பெரும் தலைகளுக்கு பாரிய ஊழலுடன் தொடர்பிருப்பதாக சான்று -Pakistan VIPs Have Connection with Mega Corruption

'பலூடா வாலாஸ்' 'சப்ரி வாலாஸ்' மற்றும் 'பாபர் வாலாஸ் என்ற பெயர்களில் போலி கணக்குகளைத் திறப்பதன் மூலம் நாட்டில் உள்ள பெரிய தலைகள் பல்லாயிரம் கோடி ரூபாய் பணமோசடி செய்ததற்கான உறுதியான ஆதாரங்கள் பணியகத்தில் இருப்பதாக பாகிஸ்தானின் தேசிய பொறுப்புக்கூறல் பணியகத்தின் தலைவர் (என்ஏபி) ஓய்வு பெற்ற நீதிபதி ஜாவித் இக்பால் கூறினார். பணியகத்தின் செயல்திறனை மீளாய்வு தொடர்பில் பணியக தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

பணியக தலைமையகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின் படி, சட்டத்தின் படி கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் பயன்படுத்தி மெகா ஊழல் வழக்குகளை தர்க்கரீதியாக முடிப்பதற்கு பணியகம் உறுதிபூண்டுள்ளதாக தலைவர் கூறினார் என்று பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.

சிரேஷ்ட மேற்பார்வை அதிகாரிகளின் கூட்டான அறிவை பயன்படுத்த ஒரு ஒருங்கிணைந்த புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளதாக தெரிவித்த அவர் சிஐடி பணிப்பாளர் , மேலதிகப் பணிப்பாளர் , விசாரணை அதிகாரி, சட்ட ஆலோசகர் மற்றும் பண மற்றும் நில வருவாய் துறையின் நிபுணர்களின் சேவைகளைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

Sat, 08/28/2021 - 15:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை