தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக வேறு பிரதேசங்களுக்கு செல்லாதீர்

PHI உபுல் வேண்டுகோள்

தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக தமது பிரதேசத்தை தவிர்த்து வேறு பகுதிகளுக்கு செல்பவர்களைத் தடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கோரியுள்ளார். மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள செல்வது, தங்களது கிராம சேவகர் பிரிவிலுள்ள தடுப்பூசி ஏற்றல் மையமாகவோ அல்லது தடுப்பூசி ஏற்றல் மையத்திற்காக பெயரிடப்பட்டுள்ள கிராம சேவகர் பிரிவாகவோ இருக்க வேண்டும். எல்லா இடங்களிலும் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் சென்றால், தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை முறையாக முன்னெடுக்க முடியாது.

பைஸர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்காக, சிலர் தங்களது தொடர்புகளைப் பயன்படுத்தி, மேல் மாகாணத்தில் இருந்து புத்தளம் மாவட்டத்திற்கு செல்கின்றனர்.

இதனைத் தவிர்க்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

 

Mon, 08/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை