தேர்தல் முறையை மாற்றுவதற்கான முன்னெடுப்பு குறித்து அமெரிக்கா பாராட்டு

சபாநாயகருடனான சந்திப்பில் அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு

 

இலங்கையில் தற்பொழுது காணப்படும் தேர்தல் முறையை மாற்றுவதற்காக பாராளுமன்றத்தினால் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளமை மற்றும் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுக்களை அமைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா மகிழ்ச்சியடைவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி.டெப்லிட்ஸ் தெரிவித்தார்.

சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தனவை நேற்று (02) பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அமெரிக்கத் தூதுவர் இதனைத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் உள்ள சபாநாயகரின் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் அமெரிக்கத் தூதரகத்தின் பிரதி அரசியல் தலைவர் மார்கஸ் காப்பென்டர் மற்றும் பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான குஷானீ ரோஹனதீர ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கையில் கொவிட் தொற்றுநோயைக் கட்டப்படுத்துவதற்கு மேலும் ஒரு தொகை தடுப்பூசிகளை வழங்குவதற்கு ஐக்கிய அமெரிக்க எதிர்பார்ப்பதாகவும் அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தார்.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் உள்ளிட்ட இரு நாட்டுக்கும் பரஸ்பர நன்மையளிக்கும் விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

விசேடமாக எதிகாலத்தில் நாட்டின் எரிசக்தித் துறையில் அமெரிக்காவினால் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படும் முதலீடுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் தற்பொழுது காணப்படும் தேர்தல் முறையை மாற்றுவதற்காக பாராளுமன்றத்தினால் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளமை மற்றும் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுக்களை அமைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா மகிழ்ச்சியடைவதாக அந்நாட்டுத் தூதுவர் இங்கு சுட்டிக்காட்டினார். முழு உலகமும் எதிர்கொண்டுள்ள பேரழிவைத் தரும் கொவிட் தொற்றுநோய் மத்தியில் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அமெரிக்கத் தூதுவர், சபாநாயகரிடம் தெரிவித்தார்.

அலெய்னா.பி.டெப்லிட்ஸ் , 2018ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகப் பணியாற்றி வருகின்றார்.

Tue, 08/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை