யூரோ கிண்ண இறுதியாட்டத்தின்போது உரிய விழிப்புணர்வு இல்லாதது "பேரழிவு"

யூரோ கிண்ண இறுதியாட்டத்தின்போது இங்கிலாந்தில் போதிய விழிப்புணர்வு இல்லாதது பேரழிவுக்குரியது என்று உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

நேற்றுமுன்தினம் இரவு நடந்த அந்த ஆட்டத்தை லண்டனில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு முகக்கவசம் இல்லாமல் கண்டு களித்தனர். ஆட்டத்தின் விறுவிறுப்பான கட்டத்தின்போது அவர்கள் ஆர்ப்பரித்தனர். அத்தகைய நடவடிக்கைகள் வேதனைக்குரியன என்று நிறுவனம் கூறியது.

மக்களின் அத்தகைய செயல்களால், நோய்த்தொற்று வேகமாகப் பரவக்கூடும் என்றும் உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

இங்கிலாந்தில் அதிக அளவில் தடுப்பூசிகள் போடப்பட்டிருந்தாலும் தற்போது அங்கு புதிதாக நோய்ப்பரவல் ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் 19ஆம் திகதியுடன் இங்கிலாந்தில் நடப்பில் உள்ள சில கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு செய்தால், நிலைமை மேலும் மோசமாகக்கூடும் என்று நிபுணர்கள் கவலை கூறியுள்ளனர்.

Wed, 07/14/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை