மெல்பர்ன் நகர முடக்கம் நீடிப்பு

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடப்பில் உள்ள முடக்கநிலை, மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட முடக்க நிலை, இன்று நள்ளிரவு முடிவுக்கு வரவிருந்தது. ஆனால், அங்கு உருவாகியுள்ள கொத்தணி பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் முதன்முதலில் தென்பட்ட ஒரு வகைக் வைரஸ் தொற்றியவர், அவுஸ்திரேலியாவுக்குத் திரும்பிய பின்னர், அந்த கொத்தணி உருவானது. அவருடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கானோர், அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 60 பேர் சென்றுவந்த இடங்களின் எண்ணிக்கை 350க்கு உயர்ந்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரான மெர்ல்பர்னில், முடக்கநிலையால் சுமார் 5 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Thu, 06/03/2021 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை