நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை; 5 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்த ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கீழ் பல்வேறு அடிப்படைகளில் சேவையாற்றும் நிரந்தரமற்ற ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கான வேலைத்திட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்து செயற்படுவதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

ஒன்லைன் ஊடாக அமைச்சில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதற்காக தற்போது நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் காணப்படும் வெற்றிடங்கள், அதற்கமைய சேவை மற்றும் சம்பள ஆணைக்குழுவின் அனுமதி மற்றும் திறைசேரியின் அனுமதியைப் பெறவேண்டுமெனவும், அதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்போது எந்த ஒரு ஊழியருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இதனை முன்னெடுப்பதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

2025ஆம் ஆண்டாகும் போது அனைவருக்கும் குடிநீர் விநியோகிக்கும் பாரிய திட்டத்தை நாடு முழுவதும் செயற்படுத்த வேண்டுமெனவும் அதற்காக பாரிய அளவிலான ஊழியர்கள் தேவையெனவும் தெரிவித்த அமைச்சர் இந்த செயற்பாடுகளுக்காக அதிகளவிலான உள்ளூர் ஒப்பந்தக்காரர்கள் இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதால் இதன்போது ஏற்படும் ஊழியர் தேவைக்காக புதிய ஊழியர்களை இணைத்துக் கொள்ளாமல் ஏற்கனவே ஐந்து வருடங்களுக்கு அதிகமாக சேவையாற்றும் ஊழியர்களுக்கு முக்கியத்துவம் வழங்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நிரந்தரமாக்குவதில் எந்தவித சிக்கல்களும் இல்லையென தான் நம்புவதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். மனிதவள சேவைத் திட்ட (Manpower) ஊழியர்களின் உரிமைகள் மற்றும் வேலை பாதுகாப்பு குறித்து பல சிக்கல்கள் எழுப்பியுள்ளதால், இது தொடர்பாக எனது சிறப்பு கவனம் மற்றும் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் எதிர்காலத்தில் தற்காலிக தேவைகளுக்காக ஆட்சேர்ப்பு செய்யும் போது முறையான சேவை பொறிமுறையொன்றை செயல்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

Wed, 06/16/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை