கர்ப்பிணிகளை சேவைக்கு அழைப்பதை இடைநிறுத்த அரசு தீர்மானம்

கர்ப்பிணிகளை சேவைக்கு அழைப்பதை இடைநிறுத்த அரசு தீர்மானம்-Pregnant Woman Will Not Be Called to Office-Ministry of Public Administration-Circular

- நாளை சுற்றுநிருபம் வெளியிட முடிவு

அனைத்து அரசாங்க நிறுனங்களிலும் கர்ப்பிணித் தாய்மார்களை சேவைக்கு அழைப்பதை இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, தற்போதைய நிலையில் கொவிட்-19 தொற்றுக்கு அதிகளவிலான கர்ப்பிணிப் பெண்கள் இலக்காகி வருவதால், தொற்றின் வீரியமும் அதிகம் என்பதனாலும் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய அத்தியாவசிய சேவைகளை இடையூறின்றி நடாத்துவது தொடர்பின் ஏற்கனவே வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்துடன் இணைந்தவாறான மற்றுமொரு சுற்றுநிருபத்தை நாளை வெளியிட முடிவு செய்துள்ளதாக, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

அரசாங்க அலுவலகங்களில் குறைந்தபட்ச எண்ணிக்கையிலான ஊழியர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பிலான அதிகாரத்தை, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழங்கும் சுற்றுநிருபமொன்று அண்மையில் பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டிருநதமை குறிப்பிடத்தக்கது.

Sun, 05/09/2021 - 21:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை