நீதியமைச்சின் விசேட அறிவித்தல்

நீதியமைச்சு சம்பந்தமான செய்திகளை நீதியமைச்சர் அல்லது அமைச்சின் செயலாளரே ஊடகங்களுக்கு வழங்க முடியும் என்றும் அதுவே உத்தியோகபூர்வமானது எனவும் நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் மேலதிக விளக்கங்கள் தேவைப்பட்டால் நீதியமைச்சர் அல்லது நீதியமைச்சின் செயலாளரினால் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

நீதிமன்றங்கள் மற்றும் நீதியமைச்சின் செயற்பாடுகள் சம்பந்தமாக வேறு தரப்பினர் மூலம் வெளியிடப்படும் செய்திகள் மற்றும் தகவல்கள் உத்தியோகபூர்வமற்றவை எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கான பொறுப்பை நீதியமைச்சு ஏற்காது எனவும் அது தொடர்பில் ஊடக நிறுவனங்கள் கவனம் செலுத்துவது முக்கியம் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

நீதிமன்ற நிர்வாகம் தொடர்பில் முழுமையான பொறுப்பு நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கே உள்ளது. அவற்றில் நீதியமைச்சு தலையிடுவதில்லை. அதற்கிணங்க நீதிமன்றம் தொடர்பான செய்திகள் நீதிச்சேவை ஆணைக்குழு ஊடாகவே ஊடகங்களுக்கு வழங்கப்படும். அவ்வாறில்லாவிட்டால் நீதிச்சேவை ஆணைக்குழுவின் இணக்கப்பாட்டுடன் நீதி அமைச்சு அதனை ஊடகங்களுக்கு வழங்கும். அதனைத் தவிர நீதிமன்றம் சம்பந்தமாகவோ அல்லது நீதி அமைச்சு சம்பந்தமாகவும் வேறு தரப்பினர் மூலம் வெளியிடப்படும் செய்திகள் உத்தியோகபூர்வமற்றவை என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. (ஸ)

Wed, 05/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை