யாழ் நகரம் படையினரால் கிருமிநீக்கம்

யாழ் நகரம் படையினரால் கிருமிநீக்கம்-Sri Lanka Army Disinfect Jaffna Town

கொவிட்‌ - 19 வைரஸ்த்‌ தொற்றினை தடுக்கும்‌ முகமாகவும்‌ மற்றும்‌ சுகாதாரப்‌ பாதுகாப்பினையும்‌ நோக்கமாகக்‌ கொண்டு யாழ்ப்பாணத்தின்‌ நகரப்‌ பகுதியானது இராணுவ வீரர்களினால்‌ அண்மையில் கிருமித்தொற்று நீக்கம்‌ செய்யப்பட்டது.

யாழ் நகரம் படையினரால் கிருமிநீக்கம்-Sri Lanka Army Disinfect Jaffna Town

சுகாதார அமைச்சின்‌ ஆலோசனைக்கு அமைவாக கிருமித்தொற்று நீக்கம்‌ செய்யும்‌ வேலைத்திட்டமானது நடைபெற்றதுடன்‌ யாழ்ப்பாணப்‌ பேருந்து தரிப்பிடம்‌, வைத்தியசாலை வீதி, காங்கேசன்துறை வீதி, கிராண்ட்‌ பஜார்‌ வீதி, வெளிச்சவீட்டு வீதி, மணிக்கூட்டு கோபுரவீதி, யாழ்‌. நகரப்பகுதி மற்றும்‌ புகையிரத நிலையம்‌ ஆகியவற்றினை 512ஆவது படைப்பிரிவு, 17ஆவது கெமுனு ஹேவா படையணி மற்றும்‌ 14ஆவது கஜபாகு படையணியின்‌ வீரர்களினால்‌ தொற்று நீக்கும்‌ நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ் நகரம் படையினரால் கிருமிநீக்கம்-Sri Lanka Army Disinfect Jaffna Town

யாழ்‌. பாதுகாப்புப்‌ படைகளின்‌ கட்டளைத்‌ தளபதி மற்றும்‌ யாழ்‌. மாவட்ட கொவிட்‌ - 19 கட்டுப்பாட்டு செயலணியின்‌ ஒருங்கிணைப்பாளருமான மேஜர்‌ ஜெனரல்‌ பிரியந்த பெரேராவின ஆலோசனைக்கமைவாக 51ஆவது தரைப்படை தலைமையக தளபதியின்‌ மேற்பார்வையின்‌ கீழும்‌ 512ஆவது படைப்பிரிவின்‌ படைத்தளபதியின்‌ ஏற்பாட்டில் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

யாழ் நகரம் படையினரால் கிருமிநீக்கம்-Sri Lanka Army Disinfect Jaffna Town

Sun, 05/16/2021 - 22:20

from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை