வடக்கிற்கு விரைவில் தேவையான தடுப்பூசி

டக்ளஸிடம் பவித்ரா உறுதி

வடமாகாணத்தில் கடமையாற்றும் ஆயுர்வேத வைத்தியர்கள் உட்பட சுகாதார சேவையுடன் தொடர்புடைய அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டுமென்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் தொடர்பாக நேற்று(18) நடைபெற்ற அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட போது கடற்றொழில் அமைச்சரினால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் சுகாதார சேவையில் ஈடுபடுகின்றவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்ற போதிலும் ஆயுர்வேத வைத்தியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படாத நிலையில், ஆயுர்வேத வைத்திய மையங்கள் சிலவற்றில் கொரோனா கண்டறிப்பட்டுள்ளதை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் சுட்டிக்காட்டினார். அதேபோன்று வடமாகாணத்தில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள அரச மற்றும் தனியார் பஸ் சாரதிகள், நடத்துநர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது முன்னிலைப்படுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

கடற்றொழில் அமைச்சரின் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி, ஆயுர்வேத வைத்திய சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான தடுப்பூசிகள் விரைவில் அனுப்பி வைக்கப்படுமெனவும் உறுதியளித்தார்.

அதேபோன்று, பொதுப் போக்குவரத்தில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கும் உறுதியளித்துள்ளார்.

Wed, 05/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை