கனேடிய உயர்ஸ்தானிகரிடம் வெளிவிவகார அமைச்சர் கவலை

அரசு சார்பில் எதிர்ப்பையும் தெரிவித்தார் அமைச்சர் தினேஷ்

ஒன்ராறியோ சட்டமன்றத்தில் இனப்படுகொலை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமூலம் 104ற்கு இலங்கை எதிர்ப்பை வெளியிடுவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னனை வெளிநாட்டு அமைச்சில் நேற்றுமுன்தினம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.  'தமிழ் இனப்படுகொலைக் கல்வி வாரம்' தொடர்பில் ஒன்ராறியோ சட்டமன்றத்தால் 2021 மே 06ஆம் திகதி தனிநபர் உறுப்பினர் சட்டமூலம் 104ஐ நிறைவேற்றியமை குறித்து அரசாங்கத்தின் ஆழ்ந்த கவலையை வெளிவிவகார அமைச்சர் இதன்போது கனேடிய உயர் ஸ்தானிகரிடம் தெரிவித்தார்.

இலங்கையில் இனப்படுகொலை நடந்திருக்கின்றமை கண்டறியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திய கனடா அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டிற்கு முரணாக இலங்கையில் 'இனப்படுகொலை' நடந்திருப்பதை ஒன்ராறியோ சட்டமன்றம் கண்டறிந்திப்பதாக வெளிவிவகார அமைச்சர் விளக்கினார். இந்த சட்டமூலத்திற்கான லெப்டினன்ட் ஆளுநரின் அரச அங்கீகாரத்தை நிறுத்துவதற்காக கனேடிய அரசாங்கத்தின் உடனடியான தலையீட்டு செய்ய வேண்டும் எனவும் வெளிவிவகார அமைச்சர் கனேடிய உயர் ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன் பல முனைகளில் இலங்கைக்கு தொடர்ந்தும் அளிக்கப்பட்ட ஆதரவுக்காக கனேடிய அரசாங்கத்துக்கு வெளிவிவகார அமைச்சர் நன்றிகளைத் தெரிவித்ததோடு, பரந்த அளவிலான இருதரப்பு விடயங்கள் குறித்தும் உயர் ஸ்தானிகருடன் கலந்துரையாடினார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 05/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை