உரிய முறையில் வீதியைப் புனரமைக்காததால் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு சேதம்

களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட அகலவத்தை பேரகம பகுதியில், அமைந்துள்ள புதிய கார்பெட் வீதியின் ஒரு பகுதி அண்மையில் பெய்த கடும் மழையால் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. 

மேற்படி இவ்வீதி அண்மையில் இருநூறு இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டது.சுமார் எழுநூறு கிலோ மீட்டர் தூரம் வரை இவ்வீதிக்கு கார்பெட்டும் இடப்பட்டு புனரமைக்கப்பட்டது.இந்நிலையில், இரண்டே வாரங்கள் கடந்து இப் பகுதியில் தொடர்ச்சியாகப் பெய்துவரும்  கனமழையால் இவ்வீதி அடித்துச் செல்லப்பட்டுள்ளது.மேற்படி வீதியின் இரு புறமும் நீர் நிறைந்த வயல் நிலங்கள் காணப்படுவதால், உரிய முறையில்

இதைப் புனரமைக்குமாறு பல பரிந்தரைகள் செய்யப்பட்டிருந்தன.

எனினும் இதைக் கருத்தலெடுக்காத ஒப்பந்தத்தாரர் தனது விருப்பத்துக்கு ஏற்ப இதற்கு முன்னர் போடப்பட்டிருந்த கொங்கிரீட் தட்டு மீதே, மீண்டும் கார்பெட் இட்டுள்ளார். மேலும் பரிந்துரையில் கூறப்பட்டவாறு

வீதியின் இரு மருங்கிலும் தடுப்பணைகளை (கல் தடுப்பு) அமைக்காது

வீதியைச் செப்பனிட்டுள்ளார். இதனாலேயே, இவ்வீதிவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பிதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே, பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள், இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்  பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.  

(களுத்துறை சுழற்சி நிருபர்) 

Wed, 05/19/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை