செய்தியாளருக்கு சீனாவில் கெடுபிடி

சீனா, வெளிநாட்டு ஊடகவியலாளர் மீது கடும் அழுத்தம் கொடுத்து வருவதோடு செய்தியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் தொடர்ச்சியான விசாரணைகளுக்கு முகம்கொடுத்து வருவதாக பி.பி.சி ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சுசூ நகரில் கால்பந்து ஆட சென்ற சீனாவுக்கான பி.பி.சி செய்தியாளர் ஸ்டீபன் மக்டொனல், சீன நிர்வாகத்தின் கடுமையான பாதுகாப்பு கெடுபிடிக்கு முகம்கொடுத்துள்ளார்.

இது சீனாவில் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக முகம்கோடுக்கும் ஒன்று என்று மக்டொனல் குறிப்பிட்டார். “எம்முடைய சிறுவர்களிடமும் இரகசிய ஒலிவாங்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் நினைக்கிறார்களா என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் பல வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் சீனாவில் இருந்து வெளியேறும்படி கேட்கப்பட்டுள்ளனர் என்று சீனாவின் வெளிநாட்டு செய்தியாளர் கழகம் குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் கீழ் சுதந்திர ஊடகம் கடும் கெடுபிடிக்கு முகம்கொடுத்துள்ளது என்று ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழுவின் ஆசிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஸ்டீவ் பட்லர் தெரிவித்துள்ளார்.

Wed, 05/26/2021 - 10:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை