கொரோனா; நாளாந்த நோயாளர் எண்ணிக்கை இரண்டாயிரத்தைக் கடக்கலாம்

- நாட்டில் அனைத்து ஆஸ்பத்திரிகளும் தயார் நிலையில்
- தொற்று நோய் பிரிவு விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர

எதிர்வரும் சில தினங்களில் நாட்டில் அன்றாட கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை விட அதிகரிக்கலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் நேற்று கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் சுத்தம் சமரவீர ,மேற்படி வைரஸ் தொற்று நோயாளர்களின் அதிகரிப்புக்கு பல்வேறு காரணங்களை குறிப்பிடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய திரிபு வகை கொரோனா வைரஸ் தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட கூட்டம் ஒன்று நேற்றைய தினம் சுகாதார அமைச்சின் கல்வி மேம்பாட்டுப் பிரிவில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.,

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

கடந்த ஒரு வார காலமாக நாட்டில் தினமும் 1,500 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர்.அவர்கள் அனைவரும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர். எனினும் அந்த எண்ணிக்கை 2000 விட அதிகரிப்பதற்கும் வாய்ப்பு உண்டு. தற்போதைய நிலை எவ்வாறு மாற்றம டையும் என்பதை அறிவதற்கு மேலும் இரண்டு தினங்கள் செல்லலாம்.

சுகாதார கட்டமைப்பு என்ற ரீதியில் விரைவாக தொழிலாளர்களை இனங்கண்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்தல் மறுபுறம் நோய் பரவுவதைத் தடுப்பதற்காக பொதுமக்கள் வழங்கும் பங்களிப்பு என இரு காரணங்களை குறிப்பிட முடியும். அதற்கிணங்க நிலைமைகளை சமாளிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக வார்ட்டுகளை ஏற்பாடு செய்யுமாறு அனைத்து வைத்தியசாலைகளுக்கும் அரசாங்கத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 05/08/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை