போர்க்களத்தில் சாட் ஜனாதிபதி பலி

வட மத்திய ஆபிரிக்க நாடான சாட்டின் ஜனாதிபதி இத்ரிஸ் டெபி இட்னோ (68), கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததாக இராணுவம் அறிவித்துள்ளது.

அந்த நாட்டை 30 ஆண்டுகள் ஆட்சி செய்த அவர், கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்த சில மணி நேரங்களில் இராணுவம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியின் இறப்பைத் தொடர்ந்து தற்போதைய பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாகவும் இத்ரிஸ் டெபியின் 37 வயது மகன் மஹாமத் தலைமையிலான இராணுவ கவுன்சில் இடைக்கால ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளதாகவும் தலைநகர் இன்ஜமீனாவிலிருந்து வந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அமைக்கப்பட்டுள்ள கவுன்சில், அடுத்த அரசு அமையும் வரை 18 மாதங்களுக்கு சாட்டின் ஆட்சிப் பொறுப்பை கவனிக்கும். 1990இல் கிளர்ச்சி மூலம் ஆட்சியை கைப்பற்றிய 68 வயதான இத்ரிஸ் ஆபிரிக்காவின் சஹேல் பிராந்தியத்தில் ஜிஹாதிக் குழுக்களுக்கு எதிரான போரில் பிரான்ஸ் மற்றும் ஏனைய மேற்கத்திய சக்திகளின் நீண்ட கால கூட்டாளியாக இருந்தார்.

Thu, 04/22/2021 - 10:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை