தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ வெளியேறல் பகுதி நேற்று முதல் மூடப்பட்டது

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ வெயியேறல் பகுதி, மறு அறிவித்தல் வரை நேற்று புதன்கிழமை காலை 06.00மணி முதல் மூடப்பட்டுள்ளது. 

கொட்டாவ வெயியேறல் பகுதியில் பணிப்புரிந்த 03ஊழியர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையையடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

ஆனாலும் அம்பியூலன்ஸ் மற்றும் பயணிகள் பஸ்களுக்கு மட்டும் செல்வதற்கு கொட்டாவ வெயியேறல் பகுதி திறக்கப்படுமென வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

இதேவேளை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக பயணம் மேற்கொள்பவர்கள் கஹதுடுவ மற்றும் அத்துருகிரிய வெளியேறல் பகுதிகளை பயன்படுத்துமாறும் வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. 

கொட்டாவ நுழைவாயிலூடாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்குள் செல்ல முடியும். ஆனால் கட்டணம் அறவிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாதென  வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.  

Thu, 04/29/2021 - 09:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை