ரூ. 5,000 பெற தகுதியானோர்; சுற்றறிக்கை வெளியீடு

ரூ. 5,000 பெற தகுதியானோர்; சுற்றறிக்கை வெளியீடு-Rs 5000 Allowance for Sinhala Tamil New Year-Circular

- நாளை, நாளை மறுதினம் விநியோகிக்க திட்டம்
- ஒரு குடும்பத்திற்கு உச்சபட்சம் ரூ. 5,000
- உப குடும்பங்கள் பற்றிய இறுதித் தீர்மானம் பி.செயலளாரிடம்

நாட்டில் நிலவும் கொவிட்-19 நோய்த்தொற்று நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, ரூ. 5,000 கொடுப்பனவைப் பெற தகுதியானவர்களை உள்ளடக்கிய சுற்றறிக்கையொன்றை பிரதமர் அலுலவகம் வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, கொவிட்-19 பரவலைத் தொடர்ந்து ரூபா 5,000 வழங்கப்பட்ட குடும்பங்கள் உள்ளடக்கப்பட்டிருந்த 10 பிரிவுகளைச் சேர்ந்தவர்களிலிருந்து 7 பிரிவினர் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த ரூ. 5,000 கொடுப்பனவுத் தொகையை நாளை (12) நாளை மறுதினம் (13) வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (10) தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 5,000 புத்தாண்டு கொடுப்பனவை பெறத் தகுதியானவர்கள்:

  1. சமுர்த்தி பெறுநர் குடும்பங்கள்
  2. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள்
  3. முதியோர் கொடுப்பனவு பெறும் குடும்பங்கள்
  4. ஊனமுற்றோர் கொடுப்பனவு பெறும் குடும்பங்கள்
  5. சிறுநீரக நோய் காரணமான கொடுப்பனவு பெறும் குடும்பங்கள்
  6. நூறு வயதை கடந்தவர்களுக்கா கொடுப்பனவு பெறும் குடும்பங்கள்
  7. கோரிக்கை விண்ணப்பம் முன்வைத்து தகுதி பெற்ற குடும்பங்கள்

(மேலுள்ள 6 பிரிவுகளின் கீழ் கோரிக்கை முன்வைத்து உதவி பெற தகுதியான குடும்பங்கள்)

அத்துடன் ஒரே குடும்பத்தில் இருவர் இதற்கான தகுதியை பெறும் நிலையில், அக்குடும்பத்திற்கு உச்சபட்சமாக ரூ. 5,000 மாத்திரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பங்களிடையே காணப்படும உப குடும்பங்களுக்கும் குறித்த ரூ. 5,000 கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான இறுதித் தீர்மானம் பிரதேச செயலாளரினால் எடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த கொடுப்பனவை பயனாளிகளிடம் மிக விரைவாக விநியோகிக்கும் பொருட்டு, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன், தகுதி வாய்ந்த உத்தியோகத்தர்களை நியமிக்க பிரதேச செயலாளரால் தீர்மானம் எடுக்க முடியும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் - சிங்கள புத்தாண்டு காலத்தில், பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ள கஷ்டங்களை ஈடுசெய்து, அவர்களது நாளாந்த வாழ்க்கையை சீராக்கும் வகையில் இக்கொடுப்பனவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக, பிரதமரின் மேலதிக செயலாளர் அன்டன் பெரேராவின் கையெழுத்துடனான குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 5,000 பெற தகுதியானோர்; சுற்றறிக்கை வெளியீடு-Rs 5000 Allowance for Sinhala Tamil New Year-Circularரூ. 5,000 பெற தகுதியானோர்; சுற்றறிக்கை வெளியீடு-Rs 5000 Allowance for Sinhala Tamil New Year-Circular

Sun, 04/11/2021 - 17:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை