ஏப்ரல் 21 பாராளுமன்ற சம்பவத்தை ஆராய 7 பேர் கொண்டு குழு

ஏப்ரல் 21 பாராளுமன்ற சம்பவத்தை ஆராய 7 பேர் கொண்டு குழு-7 Members Committee Appointed to Look in to the Incident Happened in Parliament on April 21

- எம்.ஏ. சுமந்திரன், பாக்கீர் மார்க்கார் உறுப்பினர்கள்

பாராளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள, பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் 7 எம்.பிக்கள் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் (23) அவை நடவடிக்கைகள் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் ஆரம்பமானபோது, சபாநாயகர் இதனை அறிவித்தார்.

அதற்கமைய குறித்த குழுவின் உறுப்பினர்கள் வருமாறு

  • ரஞ்சித் சியம்பலாபிட்டிய - தலைவர்
  • அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ
  • அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல
  • இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
  • அநுர பிரியதர்ஷன யாபா
  • இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார்
  • ரஞ்சித் மத்தும பண்டார
  • எம்.ஏ. சுமந்திரன்

பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஏட்டிக்குப் போட்டியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சபைக்குள் அமைதியின்மை ஏற்பட்டது. இதன்போது சபாநாயகர் சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Fri, 04/23/2021 - 11:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை