ஜப்பானிய கடலுக்கு ஏவுகணை பாய்ச்சி வடகொரியா சோதனை

வட கொரியா ஜப்பான் கடற்பகுதிக்கு இரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பாய்ச்சி இருப்பதாக அமெரிக்கா மற்றும் ஜப்பான் குறிப்பிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதியாக பைடன் பதவி ஏற்ற பின்னர் இவ்வாறான ஏவுகணை ஒன்றை சோதிப்பது இதுவே முதல்முறையாகும்.

அச்சுறுத்தல் கொண்ட ஆயுதமாகக் கருதப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதிப்பதற்கு வட கொரியாவுக்கு ஐ.நா பாதுகாப்புச் சபை தீர்மானத்தில் தடை உள்ளது.

இந்த சோதனைக்கு ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயாத இரு ஏவுகணைகளை மஞ்சள் கடலற்பகுதிக்கு பாய்ச்சி ஒருசில தினங்களிலேயே இந்த ஏவுகணை சோதனை இடம்பெற்றுள்ளது. தமது ஆட்புல கடற்பகுதிக்குள் எந்தப் பாகமும் விழவில்லை என்று ஜப்பான் குறிப்பிட்டுள்ளது. சுமார் 450 கிலோமீற்றர் தொலைவுக்குப் பாய்ச்சப்பட்ட இந்த ஏவுகணைகள் ஜப்பானின் அருகில், அதற்குச் சொந்தமற்ற கடற்பகுதியில் விழுந்ததாக அந்நாட்டு அரசாங்கம் தகவல் அளித்தது.

பாய்ச்சப்பட்ட ஏவுகணைகள் ஜப்பான், அதைச் சுற்றியுள்ள நாடுகள் ஆகியவற்றின் அமைதிக்கு அச்சுறுத்தலாக அமைவதாக அந்நாட்டுப் பிரதமர் யோஷிஹிடே சுகா குறிப்பிட்டார்.

'வட கொரியாவின் சட்டவிரோத ஆயுதத் திட்டம் அண்டை நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது' என்று ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் அமெரிக்க பசிபிக் கட்டளையகம் தெரிவித்துள்ளது.

Fri, 03/26/2021 - 14:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை