சிவனுக்கு உகந்த மஹா சிவராத்திரி விரதம் இன்று

சிவனுக்கு உகந்த சிவராத்திரி தினம் இன்றாகும். சிவனுக்கு சோமவார விரதம் முதல் திருவெம்பாவை வரை பல்வேறு விரதங்களிருப்பினும் அம்பிகை வழிபட்ட முக்கியமான விரதம் மஹா சிவராத்திரி விரதம்.

எட்டுணையும் உளத்து அன்பிலரேனும் உளரேனும் இந்நாள் எம்மை கண்டவர்  நோற்றவர் பூசை பண்ணினர் நற்கதி அடைவர்' - என்று சிவபெருமான் அருளியதாக வரதபண்டிதம் எனும் நூல் தெரிவிக்கிறது.

சிவராத்திரி தினமான இன்று இரவு முழுவதும் கண் விழித்து தரிசித்து வழிபாடு செய்ய முடியாவிட்டாலும் கூட, 'லிங்கோற்பவ' காலமாகிய இரவு 11:30 மணி முதல் 1 மணி வரை உள்ள காலத்திலாவது சிவ தரிசனம் செய்து வழிபட வேண்டும் என்கின்றன ஞானநூல்கள்.

இலங்கையில் பஞ்ச ஈஸ்வரங்கள் எனக் குறிப்பிடப்படும் முன்னேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம்,தொண்டேஸ்வரம் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் இன்று மகா சிவராத்திரி விரதம் அனுட்டிக்கப்படுகிறது. சிவராத்திரி மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று பலவகைப்பட்டாலும் மகா சிவராத்திரிதான் தலையாயது மூன்றுகோடி சிவராத்திரி தினங்கள் விரதம் இருந்த புண்ணியம் சிவராத்திரியில் விரதமிருந்தால் கிட்டும் என்பார்கள்.

Thu, 03/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை