சுமுகமாக ஆரம்பமாகிய க.பொ.த சாதாரணப் பரீட்சை

முறைகேடுகள் தொடர்பாக பதிவுகள் இல்லை

க.பொ.த சாதாரணதரப் பரீட்சை நேற்று நாடளாவிய ரீதியில் 4513 பரீட்சை நிலையங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பரீட்சை நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற்றதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

முதல் நாளான நேற்றைய தினம் எந்தவொரு மோசடி அல்லது குறிப்பிடத்தக்க சம்பவங்களும் நாட்டின் எந்தப் பகுதியிலும் நடைபெற்றதாக முறைப்பாடுகள் பதிவாகவில்லை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் பரவல் சூழ்நிலையில் சுகாதார நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டு பரீட்சை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த அவர் வைரஸ் தொற்றுக்குள்ளான 38 மாணவர்கள் நேற்று பரீட்சைக்கு தோற்றி இருந்ததாகவும் குறிப்பிட்டார். அந்த மாணவர்களுக்காக விசேட பரீட்சை நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேற்படி பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் அது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்ததாவது;

ஏற்கெனவே விடுக்கப்பட்டிருந்த அறிவிப்புக்கு இணங்க நேற்றையதினம்காலை 7.45 மணிக்கு மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளித்திருந்தனர். நேற்றைய தினம் பரிட்சை நடவடிக்கைகள் முற்பகல் 11. 40 மணிக்கு நிறைவுபெற்றன.

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக சுகாதார சட்ட விதிகளுக்கு உட்பட்டு உச்ச அளவில்

சுகாதார வழிமுறைகள் சகல படிச்சி நிலையங்களிலும் பின்பற்றப்பட்டன.

ஏனைய வருடங்களைப் போலன்றி இம்முறை பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பல்வேறு நிபந்தனைகளுக்கு மத்தியில் செயற்பட வேண்டியிருந்தது.

எவ்வாறாயினும் பரீட்சார்த்திகள் பரீட்சை நிலைய வாசல் வரை முகக்கவசங்களை அணிதல் கட்டாயமாக்கப் பட்டிருந்த நிலையில் பரீட்சை எழுதும்போது முகக் கவசத்தை நீக்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

நேற்றைய தினம் பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் மற்றும் பரீட்சை நிலையங்களில் கடமையில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்காக விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன. தொடர்ந்தும் அந்த ஏற்பாடுகள் நடைமுறையிலிருக்கும்

என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு 6 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தோற்றும் நிலையில் நாடளாவிய ரீதியில் 4513 பரீட்சை நிலையங்களும் பரீட்சை இணைப்பு செயற்பாடுகளுக்காக 542 நிலையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 03/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை