தொழிலாளர்களை அச்சுறுத்தும் எந்த நடவடிக்கைகளுக்கும் இ.தொ.கா. துணை போகாது

தோட்ட அதிகாரிகள் தமது சுயதேவைகளுக்கும் சுய பாதுகாப்புக்கும் நடத்தப்படும் போராட்டங்கள் வெறுமனே நகைப்பிற்குரியதாகும். தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் இ.தொ.கா. ஒருபோதும் துணைபோகாதென இ.தொ.கா. பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.  

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,  

தோட்டத்தொழிலாளர்களின் உரிமைகளை மதித்து அவர்களது அபிலாஷைகளை பூர்த்தி செய்யவும் தோட்ட நிர்வாகங்களை சரியான முறையில் சட்டதிட்டங்களுக்கு அமைய வழிநடத்திச் செல்லும் பட்சத்தில் இவ்வாறான அநாகரிகமான செயற்பாடுகளும் கோரிக்கைகளும் தோட்ட அதிகாரிகள் முன்வைக்க நேரிடாது. இதே வேளை தொழிலாளர்களது

உரிமை என்பது எப்போதும் மதிக்கப்படவேண்டும். பிரச்சினைகள் என்று வந்துவிட்டால் அவற்றை இருசாராறும் பேசித் தீர்த்துக்கொள்வதே ஜனநாயக பண்பு. 

தோட்டத் தொழிலாளர்களை வன்முறைக்கு தூண்டிவிடும் செயற்பாடானது வெறுக்கத்தக்கது. அவ்வாறான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க பின்நிற்கப்போவதில்லை. எவ்வாறாயினும் தோட்ட அதிகாரிகள் தொழிலாளிகள் மீது வன்முறையை திணிக்கும் பிற்போக்குத் தனமான செயற்பாடுகளை நாம் ஒருபோதும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது எனவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.

Fri, 03/05/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை