ரஷ்யாவிலிருந்து 70 இலட்சம் 'ஸ்புட்னிக் 05' தடுப்பூசிகள்

கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

கொவிட்19 நோய்க்கு எதிராக ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் 05 தடுப்பூசியின் 70 இலட்சம் டோஸ் வாங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

சுகாதார அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

69.65 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 139 கோடி ரூபா) செலவில் இத்தடுப்பூசி கொள்முதல் செய்யப்படவுள்ளது.

இலங்கையில் கொவிட்19 பரவலைக் கட்டுப்படுத்துதற்கு 14 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

Thu, 03/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை