இரண்டு தினங்களில் 20 ஜனாஸாக்கள் அடக்கம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் இருபது ஜனாஸாக்கள் சனிக்கிழமை இரவு வரை அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா தொற்று மூலம் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சிபார்சு வழங்கப்பட்டுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு தினங்களில் மாத்திரம் கொரோனாவினால் மரணித்தவர்களின் இருபது (20) ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று மூலம் மரணித்த ஜனாஸாக்களில் வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த ஒன்பது ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், சனிக்கிழமை நிட்டம்புவ பிரதேசத்தினை சேர்ந்த நான்கு பேர் , திஹாரி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் அநுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் நாரங்கொடயை சேர்ந்த ஒருவர், கொழும்பைச் சேர்ந்த ஒருவர், மாத்தளை அக்குறனை மற்றும் அம்பத்தென் பகுதியை செர்ந்த தலா ஒருவருமாக பதினொரு ஜனாசாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை 09 ஜனாசாக்களும் , நேற்றைய தினத்தில் பதினொரு ஜனாசாக்களையும் சேர்த்து இருபது ஜனாசாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக களத்தில் செயலாற்றும் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.

Mon, 03/08/2021 - 06:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை