நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பு; சீனா 1.5 பில்லியன் நிதி அங்கீகாரம்

இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பை அதிகரிப்பதற்காக சீனா 1.5பில்லியன் நிதியை அங்கீகரித்துள்ளது. 

அதற்கிணங்க சீன மக்கள் வங்கி1.5பில்லியன் நிதியை பரிமாற்றல் சலுகையின் கீழ் விநியோகிப்பதற்கு அனுமதியளித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். 

இந்தத் தொகையானது சீன நாணய பெறுமதியின் 10 பில்லியன் யுவான் என தெரிவிக்கப்படுகிறது. 2021 பெப்ரவரி மாதத்தின் இறுதிப்பகுதியில் நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு 4.55 பில்லியன் அமெரிக்கன் டொலர்களாகும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் 

Fri, 03/12/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை