குறைந்த PCR பரிசோதனை; தொற்றாளர் திடீர் வீழ்ச்சிக்கு காரணம்!

பி.சி.ஆர் பரிசோதனைகள் குறைவாக இருப்பதால் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதென இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த நாட்களில் 1,000 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனரென இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை அடிப்படையில் தான் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டமையால் கம்பஹா மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதனால், பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைவடைந்தமையால் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக உபுல் ரோஹண குறிப்பிட்டார்.

Thu, 02/25/2021 - 06:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை