கண்காணிக்க சிவில் உடையில் பொலிஸார்

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நபர்கள் சுகாதார பிரிவினரால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை உரிய முறையில் கடைப்பிடிக்கிறார்களா என்பது தொடர்பில் ஆராய சிவில் உடையிலான பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள சிலர் வெளியே சுற்றுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதன்படி, நேற்று (31) தொடக்கம் விசேட பொலிஸ் சுற்றிவளைப்பொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்த அவர், சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் அவ்விடத்தில் இருந்து வெளி யேறுதல் அல்லது வேறு நபர்களை தனிமைப்படுத்தப்பட்ட இடங்களுக்கு அழைத்து வருதல் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய தண்டனை பெறக்கூடிய குற்றமாகும் என தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் 2905 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

Mon, 02/01/2021 - 06:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை