ஊடகங்களை தணிக்கை செய்யும் திட்டம் இல்லை

அரசு சார்பில் அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய அறிவிப்பு

ஊடக கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக சில அமைப்புகள் பொய்யான வதந்தியை பரப்பி வருகின்றன. ஊடகங்களுக்கு சில கொள்கை கட்டமைப்பொன்றை கொண்டு வந்து ஊடகவியலாளர்களின் பெறுமதியை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ஊடகத்துறை அமைச்சர் கொஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு நேற்று நடைபெற்றது. அமைச்சு முன்னெடுக்க இருக்கும் ஊடக கொள்கை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

ஊடக விபச்சாரத்தில் ஈடுபடும் சிறு குழுவினர் ஊடகத்தை தவறாக பிரயோகிக்கின்றனர்.

சில தரப்பினர் திட்டமிட்ட முறையில் இது தொடர்பில் பொய்யான பீதியை பரப்பி வருகின்றனர். அவ்வாறு எதுவும் கிடையாது. அதற்கு இடமளிக்கவும் மாட்டோம். ஊடகவியலாளர்களுக்கு கூறுவது மக்கள் மத்தியில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஊடகவியலாளர்களுக்கு பெறுமதியை வழங்கவே இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு தலைப்பட்சமாக எதுவும் மேற்கொள்ளவில்லை.

சகல தரப்பினரதும் கருத்துக்களை பெற சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கலந்துரையாடி கருத்துக்களை பெற்று அடிப்படை கொள்கையொன்றை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமது கருத்துக்களை முன்வைக்குமாறு அழைப்பு விடுக்கிறோம். சிலர் ஊடகங்கள் குறித்து கீழ்த்தரமாக பேசி வருகின்றனர்.

மக்களின் உரிமைகளை பாதுகாப்பதும் அமைச்சின் பொறுப்பாகும். மக்களுக்கு பாதகமான ஏதும் நடப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டினால் அதுகுறித்தும் கவனிக்க வேண்டும்.

ஊடகங்களுக்கு கௌரவம் ,பொறுப்பு மற்றும் நம்பகத்தன்மை ஏற்படுத்தவும் இதனூடாக வாய்ப்பு ஏற்படும் என்றார். (பா)

ஷம்ஸ் பாஹிம்

Wed, 02/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை