பறவைக் காய்ச்சல் மனிதனுக்கு தொற்றிய முதல் சம்பவம் பதிவு

உலக அளவில் முதல்முறையாக எச்5என்8 ரகப் பறவைக் காய்ச்சல் மனிதரிடம் பரவியுள்ளது. அந்தச் சம்பவம் ரஷ்யாவில் பதிவானது.

நோய்த்தொற்று குறித்து உலக சுகாதார அமைப்பிடம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தென் பகுதியில் இருக்கும் கோழிப் பண்ணை ஒன்றின் ஊழியர்கள் ஏழு பேருக்கே வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. எனினும் அந்த அனைவரும் நல்ல உடல் நிலையுடன் இருப்பதாக ரஷ்ய நுகர்வோர் சுகாதார கண்காணிப்பாளர் அன்னா பப்போவா தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக ரஷ்யா, சீனா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா ஆகிய வட்டாரங்களில் உள்ள பண்ணைகளில் எச்5என்8 பறவைக் காய்ச்சல் அடையாளம் காணப்பட்டது.

ஆனால் அது தற்போது மனிதரிடம் பரவியுள்ளது. நோய்த்தொற்று உள்ளவரிடமிருந்து மற்றவர்களுக்கு வைரஸ் பரவவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

இதற்கு முன்னர் எச்5என்1, எச்7என்9, எச்9என்2 ரக வைரஸ்களால் மனிதர்கள் பாதிக்கப்பட்டனர்.

தற்போது எச்5என்8 ரகப் பறவைக் காய்ச்சல் குறித்து ஆய்வாளர்கள் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.

 

Mon, 02/22/2021 - 11:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை