தனிமைப்படுத்துவோர் மீது கூடுதல் கவனம்
பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண
சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றவர்கள் தனிமைப்படுத்தல் காலத்தில் வீடுகளிலிருந்து வெளியே செல்லும் நிலை பெருமளவில் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுகின்றவர்கள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதி பொலிஸ் மாஅதிபர் இதனைத் தெரிவித்தார்.
சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படுவோர் தொடர்பில் வீடுகளுக்கு முன்னே ஒட்டப்படுகின்ற அறிவித்தல்கள் சுகாதார அதிகாரிகளினால் அகற்றும் வரையிலும் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு பொலிசார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
from tkn
Post a Comment