நிலையான அபிவிருத்தி தொடர்பான விசேட செயற்பாட்டுக்குழு நியமனம்

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் முதலாவது கூட்டம்

நிலையான அபிவிருத்தி தொடர்பான விசேட செயற்பாட்டுக் குழுவின் முதலாவது கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையில் (17) அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வின் போது வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் மேற்படி நிலையான அபிவிருத்தி தொடர்பான குழு நியமிக்கப்பட்டதன் பின்னணி அதன் நோக்கங்கள் தொடர்பில் தெளிவு படுத்தப்பட்டன.

பிரதமர் அலுவலகம் அது தொடர்பில் தெரிவிக்கையில்,

நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கமைய 169 செயற்றிட்டங்களை இலக்காகக் கொண்டு திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் இலக்குகளை விரைவாக நிறைவு செய்வதற்கு ஏதுவாக பிரதமரின் தலைமையில் செயற்பாட்டு குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வளங்களை பயன்படுத்தி பூகோள அபிவிருத்தி இலக்கை வெற்றி கொள்ளும் வகையில் மேற்படி சட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அவற்றை அமைச்சுக்கள் மட்டத்தில் முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை வழங்கியுள்ளார். இந்த அபிவிருத்தி கருத்திட்டங்களை முறையாக முன்னெடுப்பதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுக்கு அது தொடர்பில் விரைவாக அறிவிக்க வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

 

Fri, 02/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை