உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை; சட்ட மாஅதிபர், ரஞ்சித் ஆண்டகை இருவருக்கும் பிரதிகள் வழங்கப்படும்

- அமைச்சரவை இணைப்பேச்சாளர் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவ விசாரணை அறிக்கை பிரதிகள் தயாரிக்கப்பட்ட பின்னர் உடனடியாக விசேட அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட இருப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாக ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அமைச்சரவை கூட்டத்தில் விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் கேட்டதாகவும் கூறினார்.

இதன்போது இந்த அறிக்கையின் பிரதிகள் தயாரிக்கப்பட்ட பின்னர் விசேட அமைச்சரவை கூட்டத்தை நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் விமல் வீரவன்சவிடம் ஜனாதிபதி கூறியதாகவும் அவர் தெரிவித்தார். கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் சட்ட மாஅதிபருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையின் பிரதிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Wed, 02/17/2021 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை