குளிர்காலத்தில் மலையேறி நேபாள குழு உலக சாதனை

உலகின் இரண்டாவது மிகப்பெரிய மலையான கே2இன் உச்சியை குளிர்காலத்தில் தொட்டு 10பேர் கொண்ட நோபள மலையேற்றக் குழு ஒன்று புதிய உலக சாதனை படைத்துள்ளது.  

பாகிஸ்தானிய எல்லையில் அமைந்துள்ள 8,600மீற்றர் உயரம் கொண்ட கே2மலை இமயமலைத் தொடரில் மிகப் பிரபலமானது. இது உலகின் உயரமான எவரெஸ்ட் மலையை விடவும் 200மீற்றர் மாத்திரமே உயரம் குறைவானது.    இங்கு மணிக்கு 200கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதால் மிக அபாயமிக்க மலையாக அழைக்கப்படுகிறது.

எனினும் இந்தப் பருவத்தில் கே2 உச்சியை தொட பலரும் முயற்சித்ததில் நேபாளக் குழுவே வெற்றி கண்டுள்ளது. இந்த முயற்சியின்போதும் ஸ்பெயின் நாட்டவர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.    1987–1988 பருவம் தொடக்கம் பனிக்காலத்தில் இந்த மலை உச்சியைத் தொடும் முயற்சிகள் பல இடம்பெற்றபோதும் தற்போதே அது வெற்றிபெற்றுள்ளது.    

Mon, 01/18/2021 - 16:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை