ட்ரம்பின் பேஸ்புக் கணக்கு பைடன் பதவியேற்கும் வரை முடக்கம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை கால வரையின்றி முடக்குவதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் அறிவித்துள்ளார். 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ட்ரம்ப்பின் தூண்டுதலால் அவரது ஆதரவாளர்கள் கடந்த புதன்கிழமை அமெரிக்க பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில்  4 பேர் உயிரிழந்தனர். 

இதனிடையே, சமூக வலைதளம் மூலம் டிரம்ப் விடுத்த அழைப்பின்பேரில்தான் அவரது ஆதரவாளர்கள் வொஷிங்டனில் திரண்டதுடன், பாராளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டதால் ஜனாதிபதி ட்ரம்ப்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை ஒரு நாளைக்கு முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் ஜனவரி 20 வரை முடக்கப்படுவதாக அந்நிறுவனங்களின் தலைவர் மார்க் ஸக்கர்பர்க் அறிவித்தார். இதனால், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கும் ஜனவரி 20ஆம் திகதி வரை டிரம்ப் பேஸ்புக், இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்த முடியாது என்பது உறுதியானது.  இந்நிலையில் ட்ரம்பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை கால வரையின்றி முடக்குவதாக ஸக்கர்பர்க் அறிவித்துள்ளார். 

Sat, 01/09/2021 - 08:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை