அமெ. செல்லும் குடியேறிகளுக்கு குவாந்தமாலாவில் முட்டுக்கட்டை

அமெரிக்காவை நோக்கி பயணித்து வரும் மத்திய அமெரிக்க குடியேறிகள் குழு மீது குவாந்தமாலா பாதுகாப்பு படையினர் கண்ணீர்புகைப் பிரயோகம் மற்றும் தடியடிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

ஹொன்டுராஸ் எல்லைக்கு அருகே வீதி ஒன்றில் வைத்து ஆயிரக்கணக்கானவர்கள் இடைமறிக்கப்பட்டனர். சட்டவிரோதமாக பயணிப்பவர்களை அனுமதிக்கப்போவதில்லை என்று குவாந்தமாலா அரசு தெரிவித்துள்ளது.

ஹொன்டுராஸ் நாட்டை பெரும்பான்மையாகக் கொண்ட சுமார் 7,000 முடியேறிகள் வறுமை மற்றும் வன்முறைகள் காரணமாக அமெரிக்காவில் குடியேறும் முயற்சியாக பயணித்து வருகின்றனர்.

இவர்கள் மெக்சிகோ சென்று அங்கிருந்து அமெரிக்காவுக்குள் நுழைய எதிர்பார்த்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மத்திய அமெரிக்க நாட்டவர்கள் அமெரிக்காவை அடையும் முயற்சியாக அபாயகராமான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். 'கெரவான்ஸ்' என்று அழைக்கப்படும் இந்தப் பயணம் பெரும்பாலும் கால்நடையாகவே இடம்பெறுகிறது.

நாளை பதவியேற்கவுள்ள அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி ஜோ பைடன், டிரம்பின் கடுமையான குடியேற்றக் கொள்ளையில் தளர்வை கொண்டுவர திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் குடியேறிகள் குவாதமாலாவில் இருந்து அதன் மெக்சிகோ நாட்டு எல்லையை நோக்கி பயணிக்க முயன்றனர். எனினும் தென்மேற்கு கிராமமான வடோ ஹொன்டோவில் பாதுகாப்பு படையினரால் அவர்கள் தடுக்கப்பட்டனர். இதன்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் பலரும் காயம் அடைந்துள்ளனர்.

Tue, 01/19/2021 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை