ஏப்ரல் 30ஆம் திகதிக்குள் வாக்காளர் பெயர் பட்டியல்

- திருத்தங்களுடன் முழுமைபெறும் என்கிறார் ஆணைக்குழு தலைவர்

இந்த வருடத்திற்கான வாக்காளர் இடாப்பு எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதியுடன் நிறைவடைவதுடன் அன்றைய தினம் அதில் கையொப்பமிடுவதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சி ஹேவா தெரிவித்துள்ளார்.  

தற்போது தேர்தல் இடாப்பில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் 50வீதம் நிறைவடைந்துள்ளதாகவும் அது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள எதிர் முறைப்பாடுகள் தற்போது பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.  

தேர்தல் ஆணைக்குழுவில் செயலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், மன்னார் மற்றும் வவுனியா பிரதேசங்களுக்கு எதிர் முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு இன்னும் இரண்டு வார காலங்களை வழங்குவதற்கு திணைக்களம் தீர்மானித்துள்ளது, அதற்கிணங்க கடந்த 19ஆம் திகதி முதல் அதற்கான காலம் நடைமுறையிலுள்ளதாகவும் 10நாட்கள் அதற்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நபர் ஒருவர் தமது பெயர் தேர்தல் இடாப்பில் இடம்பெற்றுள்ளதா? என்பதை அறிந்துகொள்ள தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தை பார்வையிட முடியுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் 

 

Thu, 01/21/2021 - 12:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை