சுரங்கத்தில் சிக்கிய ஊழியர்களை மீட்க குறைந்தது 15 நாட்கள் எடுக்கும்

சீனாவில் சுரங்கத்தில் சிக்கிக கொண்ட ஊழியர்களை மீட்க குறைந்தது 15 நாட்கள் எடுக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த 10ஆம் திகதி சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஷாண்டோங் மாநிலத்தில் உள்ள தங்கச் சுரங்கம் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டது.

சுரங்கத்தின் மேற்பரப்பில் சுமார் 70 தொன் சிதைவுகள் பாதைகளை மூடியிருப்பதால் ஊழியர்களை மீட்க நேரமெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

சுரங்கத்தில் 22 ஊழியர்கள் சிக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஓர் ஊழியர் காயங்களால் நேற்று மரணமானார். 10 ஊழியர்களுடன் அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர். மேலும் ஒருவர் உயிருடன் ஒரு சுரங்க அறைக்குள் உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

மற்றய 10 பேர் என்ன ஆனார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

சுரங்கத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து துளைகள் போடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Sat, 01/23/2021 - 12:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை