ஈராக் எண்ணெய் நிலை மீது ஐ.எஸ் ரொக்கெட் தாக்குதல்

வடக்கு ஈராக்கில் இடம்பெற்ற ரொக்கெட் தாக்குதலில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் பாரிய தீ ஏற்பட்டதால் அதன் பணிகள் சிறிது நேரத்திற்கு நிறுத்தப்பட்டதாக அந்நாட்டு எண்ணெய் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சலாஹுத்தீன் மாகாணத்தில் இருக்கும் சிறிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய எரிபொருள் சேமிப்புத் தொட்டி ஒன்றின் மீதே கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் எந்த உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என்று அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தீ கட்டுப்படுத்தப்பட்டு ஒருசில மணி நேரங்களில் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ் குழு பொறுப்பேற்றுள்ளது. இரு கட்யூசா ரொக்கெட்டுகள் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐ.எஸ் குழுவின் அமக் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

ஐ.எஸ் இடம் ஈராக்கில் எந்த ஒரு நிலப்பகுதியும் கட்டுப்பாட்டில் இல்லாதபோதும் அதன் சிறு குழுக்கள் நாடெங்கும் சிறிய தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் ஈரான் ஆதரவு போராட்டக் குழுக்களும் ஈராக்கில் அமெரிக்க நிலைகள் மீது ரொக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

Tue, 12/01/2020 - 09:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை