முன்னாள் அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்க காலமானார்

முன்னாள் அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்க காலமானார்-TB Ekanayake Passed Away

முன்னாள் அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்க இன்று காலை காலமானார்.

சுகவீனமுற்றிருந்த அவர், குருணாகல் கூட்டுறவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

மரணிக்கும் போது அவருக்கு 66 வயதாகும்.

1954ஆம் ஆண்டு (1954.08.28) பிறந்த அவர், 1975ஆம் ஆண்டு அரசியலுக்குள் பிரவேசித்ததோடு, 1993ஆம் ஆண்டு வட மேல் மாகாண சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முதன் முதலில் 1977ஆம் ஆண்டு லங்கா சமசமாஜக் கட்சி சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டபோதிலும், 1994ஆம் ஆண்டு குருணாகல் மாவட்டத்தில் ஶ்ரீ.ல.சு.க. சார்பில் போட்டியிட்டு முதன்முதலில் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ரி.பி. ஏக்கநாயக்க, கலாசார விவகார அமைச்சரவை அமைச்சராகவும், கலாசாரம் மற்றும் கலை; நெடுஞ்சாலைகள்; பொது நிர்வாகம்; கல்வி ஆகிய பிரதி அமைச்சுப் பதவிகளையும் வகித்திருந்தார்.

இறுதியாக 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற அவர், காணி இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் ஶ்ரீ.ல.பொ.பெ. கட்சி சார்பில் போட்டியிட்ட அவர், பாராளுமன்றத்திற்கு தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மிக நீண்ட காலமாக யாப்பஹுவ தேர்தல் தொகுதியின் ஸ்ரீ.ல.சு.க. அமைப்பாளராக இருந்த ரி.பி. ஏகநாயக்க, ஒரு பிள்ளையின் தந்தையாவார்.

Sun, 12/06/2020 - 11:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை