அனூஷ பெல்பிட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளராக நியமனம்

அனூஷ பெல்பிட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளராக நியமனம்-Anusha Palpita Appointed As Ministry of Industries-From Jan 01

- 2021 ஜனவரி 01 முதல் அமுல்

கைத்தொழில் அமைச்சின் புதிய செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான அனூஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நியமனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், எதிர்வரும் 2021 ஜனவரி 01 முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

அனூஷ பெல்பிட்ட மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த போது இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியிருந்தார்.

கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தலில் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்குரிய  600 மில்லியன் ரூபா நிதியை, விகாரைகளுக்கு சில் துணி பகிர்ந்தளித்ததன் மூலம் அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக, குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்ட நிலையில், அண்மையில் அவர் மற்றும் ஜனாதிபதியின் தற்போதைய தலைமை ஆலோசகராக பணியாற்றி வரும் லலித் வீரதுங்க ஆகியோர் அக்குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Wed, 12/23/2020 - 21:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை