அமெரிக்காவில் மொடர்னா தடுப்பூசி வழங்கல் ஆரம்பம்

அமெரிக்காவில் மொடர்னா நிறுவனம் தயாரித்த கொவிட்–19 தடுப்பு மருந்துகளின் விநியோகம் ஆரம்பமாகியுள்ளது.

அமெரிக்கக் களஞ்சியங்களில் இருந்து மருந்துகளின் முதல் தொகுதியை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சுமார் 3,700 இடங்களுக்கு அவற்றைக் கொண்டுசேர்க்கும்.

மொடர்னா நிறுவனம் தயாரித்த 5.9 மில்லியன் தடுப்பூசிகளை இந்த வாரத்தில் விநியோகிக்க அமெரிக்க அரசாங்கம் திட்டமிடுகிறது. அத்துடன் பைசர் நிறுவனத்தின் 2 மில்லியன் தடுப்பூசிகளும் விநியோகிக்கப்படும்.

அமெரிக்க மாநிலங்கள் சில, தொலைவில் உள்ள வட்டாரங்களுக்கு மொடர்னா நிறுவன மருந்தைத் தேர்ந்தெடுத்துள்ளன. அதனை 30 நாள் வரை சாதாரணக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்க இயலும் என்பது அதற்குக் காரணமாகும்.

பைசர் நிறுவனத் தடுப்பு மருந்தை, உறைநிலைக்குக் கீழ்ப்பட்ட மிகக் குறைந்த தட்பநிலையில் மட்டுமே வைத்திருக்க முடியும். வழக்கமான குளிர்சாதனப் பெட்டிகளில் அதனை 5 நாள் மட்டுமே வைத்திருக்கலாம். 

 

Tue, 12/22/2020 - 08:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை