'நீதிமன்ற இல்லம்' நிர்மாணத்திட்டம் பூர்த்தியாகும் வரை மட்டுமே மாற்றிடம்

மக்களுக்கான நல்ல திட்டங்களை குறை கூறுவது கவலைதரும் விடயமென்கிறது நீதியமைச்சு

நீதியமைச்சு தற்போது அமைந்துள்ள இடத்திலிருந்து அகற்றுவது பிரச்சினையை ஏற்படுத்தும் என்றாலும் எதிர்வரும் வருடங்களில் நீதிமன்ற தொகுதியில் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படும்.

இலங்கை நீதிமன்ற தொகுதி மற்றும் சட்டத்தை நிலைநாட்டும் நடவடிக்கைகளை செயல்திறன் மிக்க மற்றும் மக்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் வகையில் மேற்கொள்ளவேண்டிய தேவை முன்னெப்போதுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. நீதிஅமைச்சு என்பது 350 பணியாளர்களை கொண்ட பாரிய நிறுவனமாகும். அத்துடன் அமைச்சுடன் இணைந்து 17 நிறுவனங்களும் செயற்படுகின்றன. இங்கு நீதி அமைச்சு, சட்ட மாஅதிபர் திணைக்களம், சட்டவரைவு திணைக்களம், நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழு, சட்டத்தரணிகள் சங்கம் என்பன நீதி மன்ற தொகுதிக்கு அண்மையில் அமைந்திருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

தற்போது உள்ள கட்டடத்தை நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக பெற்றுக்கொடுத்து வேறு இடத்திற்கு செல்வதைத் தவிர ஒரு மாற்று வழி காணப்படவில்லை.

நீதி அமைச்சு அமைந்துள்ள இடம் மற்றும் கட்டடம் குறிப்பிட்ட அமைச்சுக்கான பொருத்தமான இடமாக அமைந்துள்ளதோடு சட்டத்தரணிகள் மற்றும் நீதிபதிகள் இலகுவாக சென்றுவர கூடியதாகவும் ,மக்கள் சென்று வர இலகுவானதாகவும், அதனுடன் இணைந்த நிறுவனங்களுக்கு செல்வதற்குமான வசதிகளை கட்டிடம் கொண்டிருந்தது. ஆனால் மிகவும் விரிவான நோக்கில் மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்காக நீதி அமைச்சு தற்போதுள்ள இடவசதியை விட 50 வீத இட வசதி குறைந்த உலக வர்த்தக மையத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தது இந்த மாற்று யோசனைகளை ஆராய்ந்த பின்னராகும்.

எவ்வாறாயினும் எதிர்காலத்தில் நிர்மாணிக்கப்பட எதிர்பார்த்துள்ள தற்போது அடிப்படை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘நீதிமன்ற இல்லம்’ வளாக காணிக்கு நீதி அமைச்சை கொண்டு செல்ல எண்ணியுள்ளதோடு அத்திட்டம் பூர்த்தி அடையும் வரை இரண்டு வருட காலத்துக்கு மாத்திரம் அமைச்சை இவ்வாறு 2 வருடத்திற்கு தற்காலிகமாக கொண்டுசெல்ல எதிர்பார்க்கப்பட்டது.

விசேடமாக இதன் மூலம் நாடு பூராவும் தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கைகள், பொதுமக்களின் வசதிகள், அவசர நிலைமைகளுக்கு இணைந்து செயல்படுதல் போன்ற நடவடிக்கைகளுக்காக தயாரிக்கப்பட்ட நீதிமன்ற தொகுதியின் நடவடிக்கைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் திட்டம் மற்றும் காலாவதியான சட்டங்களை திருத்தி அபிவிருத்தி இலக்கை நோக்கி நாட்டை முன்னெடுத்து செல்வதற்கு திட்டமொன்றை செயல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

உச்சநீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் விரிவடைந்ததன் காரணமாக தேவையான வசதிகள் மற்றும் இடவசதி தேவையைப் பூர்த்தி செய்ய பெருமளவு மேலதிக பணம் செலவாகும் என்பது இங்கு கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது . அதன்படி மாத வாடகையாக 9.8 மில்லியன் ரூபா வாடகைக்கு நீதி அமைச்சு உலக வர்த்தக மையத்திற்கு கொண்டு செல்லமுடிவு செய்யப்பட்டது.

அதன்படி இரண்டு மாத காலத்துக்கு 35 ஆயிரம் கனஅடி இடத்திற்கு அமைச்சை குறுகிய காலத்துக்கு கொண்டு சென்று தற்போதுள்ள கட்டடத்தை நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வழங்கி மக்களுக்கு பயனுள்ள சேவையை வழங்கும் நோக்கில் மேற்கொள்ளப்படவிருந்த நடவடிக்கை தொடர்பாக ஆராயாமல் தேவையைப் புரிந்து கொள்ளாமல் தேவையற்ற விடயங்களை கூறி இந்த நல்ல முயற்சிக்கு குறுகிய நோக்கில் ஒரு சிலர் வேறு அர்த்தங்களைக் கற்பிக்கிறார்கள்.

எதிர்கால நோக்குடன் நாட்டை உருவாக்கும் குறிக்கோளுடன் திட்டங்களை நாட்டு மக்களுக்காக மேற்கொள்ளும் இவ் வேளையில் அதற்காக உதவி வழங்காமல் தேவையில்லாத விடயங்களை கூறி மேற்கொள்ளப்படும் திட்டங்களையும் கட்டுக்கதைகளையும் கவலையுடன் கண்டிக்க வேண்டியுள்ளது. அதன்படி பல கலந்துரையாடல்களின் பின்னர் நீதி அமைச்சை தற்போது உள்ள கட்டிடத்தில் நடத்திச் செல்லவும். உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை விரிவுபடுத்த வேறு பொருத்தமான இடத்தைப் பெற்றுக் கொள்ளவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tue, 12/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை