அமெரிக்காவில் 9 மில்லியன் தடுப்பு மருந்துகள் விநியோகம்

அமெரிக்காவில் கிட்டத்தட்ட 9.5 மில்லியன் முறை செலுத்தக்கூடிய கொரோனா தொற்றுத் தடுப்பு மருந்து விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் தெரிவித்தது.

மொடர்னா, பைசர் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பு மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அடுத்த வாரம் 4.67 மில்லியன் முறை செலுத்தக்கூடிய வைரஸ் தொற்றுத் தடுப்பு மருந்து விநியோகிக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறியுள்ளனர்.

அதையும் சேர்த்து, அமெரிக்காவுக்கு இம்மாத இறுதிக்குள் கிட்டத்தட்ட 20 மில்லியன் முறை செலுத்தக்கூடிய தடுப்பு மருந்து தருவிக்கப்படும் என்று கூறப்பட்டது.

இதுவரை கிடைத்த தகவலின்படி, ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் பைசர்–பயோஎன்டெக் நிறுவனங்களின் கொவிட்–19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.

இம்மாத இறுதிக்குள் 20 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போட அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இருப்பினும் அதை எட்டுவதற்கான சாத்தியம் குறைவு என்றும், தடுப்பு மருந்து விநியோகிக்கப்படுவதிலும் மக்களுக்குத் தடுப்பூசி போடப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டுவருகிறது என்றும் அதிகாரிகள் கூறினர். இந்நிலையில், அமெரிக்காவில் மேலும் 18 மில்லியனுக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 3,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

Fri, 12/25/2020 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை