உலக இடம்பெயர்ந்தோர் 80 மில்லியனாக உயர்வு

உலகெங்கும் இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை 80 மில்லியனை எட்டி இருப்பதாக ஐ.நா அகதிகள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

உலகில் வலுக்கட்டாய இடம்பெயர்வுகள் தொடர்பில் ஐ.நா அகதிகளுக்கான நிறுவனம் நேற்று தனது அறிக்கையை வெளியிட்டது.

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் உட்பட மோதல்கள், பாகுபாடுகள் காரணமாக இடம்பெயர்ந்த மொத்த மக்களின் எண்ணிக்கை முதல் முறையாக 80 மில்லியனைத் தொட்டிருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உள்நாட்டுப் போர் நீடிக்கும் சிரியாவில் அதிக எண்ணிக்கையான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வெனிசுவேலா, ஆப்கானிஸ்தான் மற்றும் தென் சூடான் அகதிகளின் எண்ணிக்கை அதிமாக உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக எல்லைகள் தற்காலிகமாக மூடப்பட்டது மற்றும் உள்நுழைவுக் கட்டுப்பாடுகள் காரணமாக அகதிகள் பாதுகாப்பான இடத்தை அடைவதில் பெரும் சிரத்தை எதிர்கொண்டுள்ளனர்.

Thu, 12/10/2020 - 13:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை